வக்பு திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்…!! முன்மொழிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள் தானமாக வழங்கிய நிலங்கள் மூலம் வரும் வருவாயானது மசூதி, இஸ்லாமியர்களின் கல்வி மேம்பாடு உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வஃக்பு சொத்துக்களை நிர்வகிப்பதற்காக கடந்த 1955-ம் ஆண்டு வஃக்பு வாரிய சட்டம் உருவாக்கப்பட்டது. இந்த சட்டத்தில்தான் பல முக்கிய திருத்தங்களை பாஜக தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்டிருக்கிறது. இந்நிலையில் வக்ஃபு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் முன்மொழிந்தார்
அது தொடர்பான சட்ட திருத்த மசோதாவை, ஆகஸ்ட் 8ம் தேதி மக்களவையில் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தாக்கல் செய்திருந்தார். இந்த சட்ட திருத்த மசோதாவில் வக்பு வாரியங்களின் செயல்பாடுகளின் வெளிப்படை தன்மை, வாரியத்தில் இஸ்லாமிய பெண்கள் மற்றும் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களின் பிரதிநிதித்துவம் உள்ளிட்டவற்றை உறுதி செய்வது, வாரியத்தின் அதிகாரத்தை ஒழுங்குபடுத்துவது போன்ற பல்வேறு மாற்றங்களை முன்மொழிந்துள்ளது.
வக்பு வாரிய தளத்தில் பதிவேற்றம் :
வக்பு வாரியத்தின் அதிகாரங்கள் மற்றும் சொத்து வக்பு வாரிய உள்ளிட்டவற்றை முடிவு செய்வது தொடர்பான சட்ட பிரிவு 40ஐ வக்பு மசோதா தவிர்க்க முயற்சி செய்வதாகவும்., வாரியத்தின் அதிகாரத்தை மாற்ற மசோதா மட்டுப்படுத்தியுள்ளதாக கூறுகிறது.
வக்பு வாரிய சொத்துரிமையானது அதனை ஆய்வு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வக்பு வாரியத்தின் அனைத்து சொத்துக்களையும், அதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களிடம் முறைப்படி பதிவு செய்து அதற்குரிய ஆவணங்கள் மற்றும் விவரங்களை வக்பு வாரிய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற திருத்தமும் அதில் இடம்பெற்றுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி அந்த மசோதாவானது நாடாளுமன்றத்தின் கூட்டுக்குழு விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு சட்டப்பேரவையில் வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இதுகுறித்து உரையாற்றிய அவர், நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட பெரும்பான்மையான கட்சிகள் சட்டத்திருத்தத்தை எதிர்த்துள்ளன.
வக்பு நிர்வாகத்தில் அரசின் தலையீட்டை அதிகரிக்கும் வகையில் சட்டத்திருத்தம் உள்ளது. இஸ்லாமிய மக்களை வஞ்சிக்கும் சட்டத்திருத்ததை நாம் எதிர்க்க வேண்டும். வக்பு வாரியங்களின் சுயாட்சியை பாதிக்கும் வகையில் திருத்தச்சட்டம் கொண்டு வரப்படுகிறது. வக்பு நிலங்களை நில அளவை செய்யும் அதிகாரம் நில அளவை ஆணையரிடம் இருந்து ஆட்சியருக்கு மாற்றப்படும். என தெரிவித்தார்.
இத்தகைய வக்ஃபு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக பேரவையில் முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்துக்கு பல்வேறு கட்சியினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். வக்பு சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து ஏற்கனவே கேரள, கர்நாடக மாநில அரசுகள் தனித்தீர்மானம் நிறைவேற்றி உள்ள நிலையில் இன்று தமிழ்நாடு அரசு தனி தீர்மானம் கொண்டுவந்துள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..