தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் பாஜகவை கண்டித்து தீர்மானம்….!! திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்..!!
சென்னையில் நடைபெறும் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஒன்றிய பாஜக அரசு நிதிப்பகிர்வில் தமிழ்நாட்டுக்கு வஞ்சனை காட்டுவதாக கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 10மணிக்கு திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கூட்டம் நடைபெற்றது.
முதல்வருக்கு வாழ்த்து – 2024 மக்களவைத் தேர்தல் களத்தில் தமிழ்நாடு – புதுச்சேரி மாநிலங்களில் நாற்பதுக்கு நாற்பது என்ற மகத்தான வெற்றியை திமுக தலைமையிலான கூட்டணி பெற்றுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி என மொத்தம் உள்ள 40 தொகுதியிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. அண்மையில் நடந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தல் உள்ளிட்ட அனைத்துத் தேர்தல் களங்களிலும் வாகை சூடி, தொடர் வெற்றியை கொடுத்தவர்களுக்கு நன்றி .. கூறினார்..
அதை ஆவணமாக பதிவு செய்யும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய நாடாளுமன்ற தேர்தல்-2024 40/40 தென் திசையின் தீர்ப்பு என்ற நூலை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட அக்கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு பெற்று கொண்டார்.
பெரியாரின் கொள்கைகளை ஜனநாயக வழியிலும்., சட்டங்களாகவும் திட்டங்களாகவும் நிறைவேற்றும் நோக்கத்தில் அண்ணாவால் 1949-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திமுக 75 ஆண்டுகளாக மக்களுக்குப் பணியாற்றி வருகிறது. இந்த 2024-ஆம் ஆண்டு தனது பவள விழா நிறை வினைக் கொண்டாடுகிறது. என பேசினார்…
அதனையடுத்து, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவை ஒட்டி 100ரூபாய் நாணயம் வெளியிடும் ஒன்றிய அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதே சமயம் நிதிப்பகிர்வில் தமிழ்நாட்டுக்கு வஞ்சனை காட்டும் ஒன்றிய பாஜக அரசுக்கு கண்டனம் தெரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவை கொண்டாடியதை தொடர்ந்து., திமுக.வின் பவளவிழா ஆண்டு நிறைவினையும், திமுக தொடங்கப்பட்ட நாளான செப்டம்பர் 17ம் தேதி முப்பெரும் விழாவாக கொண்டாடி மகிழ இருக்கிறது. என இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தீர்மானிக்கிறது.
இந்திய ஒன்றிய அரசு 100 ரூபாய் மதிப்பிலான கருணாநிதியின் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட முன்வந்தமைக்கு இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
அதேசமயம், மாநில உரிமைக்காக குரல் கொடுக்கும் முதல்வரின் வழிகாட்டுதலின் படி மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.. எனவே தமிழ்நாட்டு மக்களுக்கு என்று எந்தச் சிறப்பு திட்டத்தையும் வழங்காமல் இருப்பது, முறையான நிதி ஒதுக்கீடு செய்யாமல் இருப்பது, ரயில்வே துறையின் திட்டங்களை நிராகரிப்பது., பாரபட்சம் காட்டுவதையும்., தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசை இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தனது கண்டனத்தைத் தெரிவிக்கிறது.
இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பல்வேறு முக்கிய விவரங்கள் குறித்து பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கட்சி வளர்ச்சி குறித்தும், 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..