ஓய்ந்த பிரச்சாரம்..!! முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்..!! பரபரப்பான ஹரியானா..!!
ஹரியானா மாநிலத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தலையொட்டி பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்..
ஹரியானா மாநிலத்தில் வரும் அக்டோபர் 5-ஆம் தேதி அன்று, சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலின் முடிவுகள், 8-ஆம் தேதி அன்று அறிவிக்கப்பட உள்ளன. இதனால், அம்மாநிலத்தில் தேர்தல் களம் மிகவும் பரபரப்பாக இருந்து வருகிறது.
முதலாவதாக 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக அக்டோபர் 5-ஆம் தேதி அன்று அதாவது நாளை தேர்தல் நடைபெறவுள்ளது. தொடர்ந்து 10 ஆண்டுகளாக பாஜக மட்டுமே இங்கு ஆட்சி செய்து வந்துள்ளது., எனவே இந்த முறையும் ஆட்சியை தக்க வைத்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் பாஜக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது..
இந்த அரசியல் போட்டியை பொறுத்த வரையில், பாஜக தனியாகவும், காங்கிரசும்-சிபிஎம் கட்சியும் ஒரு கூட்டணியாகவும், ஜனநாயக ஜனதா கட்சியும்-ஆசாத் சமாஜ் கட்சி ஒரு கூட்டணியாகவும் போட்டியிடுன்றன.
இந்திய தேசிய லோக் தளம்-பகுஜன் சமாஜ் கட்சி ஒரு கூட்டணியாகவும் களம் காண்கிறது. இந்நிலையில் ஹரியானா மாநிலத்தில் பிரசாரம் நிறைவடைந்தது. முன்னதாக அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.
நாளை ஹரியானாவின் சட்டமன்ற தேர்தலையொட்டி கலவரங்கள் எற்படாமல் இருக்க பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.. மேலும் குறிப்பிட்ட சில முக்கிய நகரங்களில் மட்டும் இராணு பாதுகாப்பும் குவிக்கப்பட்டுள்ளது.. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..