பழிக்குபழி.. முன்விரோதம் காரணமாக இளையரை வெட்டி ஆற்றில் வீசிய சம்பவம்… 5 பேர் கைது..!
சென்னை சைதாப்பேட்டை மறைமலை அடிகளார் பாலம் கீழே உள்ள அடையாறு ஆற்றின் கரையோரம் வாலிபர் உடல் நேற்று முன் தினம் மிதந்து வந்ததாக கோட்டூர்புரம் போலீஸார்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீயணைப்பு துறையினரின் உதவியுடன் சடலத்தை மீட்க நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து தீயணைப்புத்துறையினரின் உதவியோடு இளையரின் சடலம் மீட்கப்பட்டது.
மேலும் இளையரின் கழுத்து, முகம் உள்ளிட்ட இடங்களில் சரமாரியான வெட்டுக்காயம் இருந்தது. இதனால் அவர் கொலை செய்யயப்பட்டு உடல் ஆற்றில் வீசப்பட்டது தெரிய வந்தது.
கொலை செய்யப்பட்டவர் யார், அவரைக் கொலை செய்தவர்கள் யார் என்பது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது கொலை செய்யப்பட்டவர். கண்ணகி நகர் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பைச் சேர்ந்த கருப்பு ஆகாஷ் ( 27) என்பது தெரியவந்தது. பின்னர் ஆகாஷின் குடும்பத்தினருக்கு போலீஸார் தகவல் தெரிவித்தனர். அவர்களும் இறந்தது ஆகாஷ் என்பதை உறுதி செய்ததை தொடர்ந்து அந்த இளையரின் உடலை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதக்காக போலீஸார் அனுப்பி வைத்தனர்.
இவர் மீது கண்ணகிநகர் காவல் நிலையத்தில் 10க்கு மேற்ப்பட்ட வழக்குகள் நிழுவையில் உள்ளதால் முன் விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை தொடங்கியது.
அப்போது அவரது நண்பர்கள் சேர்ந்து ஆகாஷை கொலை செய்தது தெரியவந்தது. கடந்த ஆண்டு அருண் என்பவரின் நண்பரை கொலை செய்த வழக்கில் ஆகாஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பின் ஜாமீனில் வெளி வந்துள்ளார்.
இதனால் தன் நண்பனை கொலை செய்த ஆகாஷை பழிக்குப்பழி வாங்க அருண் திட்டமிட்டுள்ளார். அதற்காக ஆகாஷை கொலை செய்ய அவர் பலமுறை முயற்சி செய்துள்ளார். ஆனால், அந்த முயற்சிகள் தோல்வியில் முடிந்ததால் ஆகாஷ் நண்பர்களை வைத்தே அவரை கொலை செய்ய திட்டமிட்டனர்.
அதன்படி ஆகாஷிற்கு அளவுக்கு அதிகமாக மது கொடுத்து அவர் மயங்கியதும் வெட்டிக்கொலை செய்து ஆற்றில் உடலை வீசியது போலீஸார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.
மேலும் இந்தக் கொலை தொடர்பாக இதுவரை 5 பேரை போலீஸார் கைது செய்து நிலையில் இன்னும் இவ்வழக்கில் யாருக்கெனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-பவானி கார்த்திக்