மணிப்பூரில் வெடித்த கலவரம்…!! பைரன் சிங் போட்ட உத்தரவு..!!
மணிப்பூரில் மீண்டும் வெடித்த கலவரத்தால் அடுத்த இரண்டு நாட்களுக்கு இணையம் மற்றும் மொபைல் சேவைகளை அம்மாநில அரசு நிறுத்தி வைத்துள்ளது.
மணிப்பூர் ஜிரிபாமில் இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டதை அடுத்து நேற்று காலை மணிப்பூர் முதல்வர் பிரைன் சிங்கின் வீடு மற்றும் அலுவலகத்தையும் பாஜகவை சேர்ந்த மூன்று மணிப்பூர் அமைச்சர்கள் மற்றும் ஆறு சட்டமன்ற உறுப்பினர்கள் வீடுகளை சில எதிர்ப்பாளர்கள் தாக்கியுள்ளதால் 3 பேர் கொல்லப்பட்டுள்ள விவகாரத்தில் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற உருப்பினர்கள் வீடு மற்றும் சொத்துக்களை மர்ம நபர்கள் தீயிட்டு வன்முறையில் ஈடுபட்டதால் அவர்களை கலைக்க பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் மணிப்பூர் போர்களமாக காட்சியளித்தது.
இதனை தொடர்ந்து மணிப்பூர் சுகாதாரத்துறை அமைச்சர் சபம் ரஞ்சன் லாம்பெல் பேசுகையில் 3 பேர் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும், பொதுப் பிரச்னைகளுக்கு அரசு தீர்வு காணத் தவறினால் பதவி விலகபோவதாகவும் அவர் போராட்டக்காரர்களிடம் உறுதியளித்தார்.
இந்த கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதற்காக இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு, பிஷ்ணுபூர், தௌபல், காக்சிங், காங்போக்பி மற்றும் சுராசந்த்பூர் ஆகிய பகுதிகளில் இணைய சேவைகள் மற்றும் மொபைல் சேவைகளை அம்மாநில அரசு அடுத்த இரண்டு நாட்கள் நிறுத்திவைத்துள்ளது.
இம்பால் கிழக்கு மற்றும் மேற்கு, பிஷ்ணுபூர், தௌபல் மற்றும் கக்சிங் பகுதிகளில் கலவரம் தீவிரமடைந்துள்ள காரணத்தால் முதல்வர் பைரன் சிங் ஊரடங்கு உத்தரவு விதித்துள்ளார். மேலும் மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட பாதுகாப்புப் படைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும், வதந்திகளை நம்பாமல், பாதுகாப்புப் படைகளுக்கு ஒத்துழைப்பு தந்து அமைதி காக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..