மணிப்பூரில் மீண்டும் வெடித்த கலவரம்…!! 20ம் தேதி வரை விதிக்கப்பட்டுள்ள தடை..!!
மணிப்பூரில் 5 மாவட்டங்களில் 20ம் தேதி வரை இணைய சேவைக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் குக்கி, மெய்தி இன மக்களுக்கிடையே கலவரம் வெடித்தது அதில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களை விட்டு வெளியேறினர்..
மணிப்பூரில் இயல்புநிலை படிப்படியாக குறைந்து வரும் நிலையில், தற்போது மீண்டும் வன்முறை சம்பவம் வெடிக்க தொடங்கியுள்ளது., டிரோன்கள், சிறிய விமானங்கள், வெடி மருந்துகள் நிரப்பிய ராக்கெட்கள் உள்ளிட்டவற்றால், ஆயுதம் ஏந்திய குழுக்கள் தாக்குதல் நடத்தியுள்ளது.
கடந்த செப்டம்பர் 7ம் தேதி மணிப்பூர் மாநிலத்தின் ஜிரிபாம் மாவட்டத்தில் நடந்த வன்முறையால் 8 பேர் கொல்லப்பட்ட நிலையில் 12 பேர் படுகாயம் அடைந்தனர். எனவே மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட வலியுறுத்தி தாக்குதல்கள் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஆளூநர் மாளிகை, தலைமைச் செயலகம் ஆகியவற்றை முற்றுகையிட்டு மணிப்பூர் மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மற்றும் வன்முறை சம்பவங்களில் மாணவர்கள், சிறுவர்கள் உள்பட சுமார் 60 பேர் காயமடைந்தனர்.
மணிப்பூரில் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக 5 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதோடு 10ம் தேதி தொடங்கி 15ம் தேதி வரை இணைய வசதிகள் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மணிப்பூரில் நிலவும் சட்டம்-ஒழுங்கு சூழலை கருத்தில் கொண்டு, அங்கு இணைய சேவைக்கான தடை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மேற்கு இம்பால், கிழக்கு இம்பால், தவுபால், பிஸ்னுபூர் மற்றும் கக்சிங் ஆகிய 5 மாவட்டங்களில் வரும் 20ம் தேதி வரை இணைய சேவைக்கான தடை நீடிக்கும் என மாநில உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..