உக்ரைன் – ரஷ்யா போர் எதிரொலியாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 139 அமெரிக்க டாலர் அதிகரித்துள்ளது.
உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி ரஷ்யா உக்ரைன் மீது தொடர்ந்து 12வது நாளாக தாக்குதல் நீடிக்கிறது. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 139 அமெரிக்க டாலர் அதிகரித்துள்ளது.
கடந்த 14 ஆண்டுகளில் கச்சா எண்ணெய் விலை இந்த அளவுக்கு உச்சத்தை தொடுவது இதுவே முதல் முறையாகும். உக்ரைன் மீதான தாக்குதலை கண்டித்து ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை உலக நாடுகள் பெரிய அளவில் குறைந்துள்ளன. இதன் காரணமாக ஒரே நாளில் கச்சா எண்ணெய் விலை 10 சதவீதம் உயர்ந்துள்ளது.
இதையடுத்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 139.13 டாலராக அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை கடுமையாக அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இது குறித்து இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ஆய்வு செய்து வருகின்றன.