பழனியில் ரோப் கார் சேவை நிறுத்தம்..! எத்தனை நாட்களுக்கு தெரியுமா..?
பழனியில் படிக்கட்டு வழியாக ஏறி சென்று முருகரை தரிசனம் செய்வதற்கு சிரமம் படும் பக்தர்களுக்கு எதுவாக இருக்கும் வகையில் ரோப்கார் சேவை வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் பராமரிப்பு பணிக்காக ரோப்கார் சேவை ரத்து செய்யப்படும் அந்த வகையில் இந்த ஆண்டும் ரோப்கார் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இன்று முதல் 45 நாட்களுக்கு ரோப்கார் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. என கோவில் நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வயதானவர்கள்.., குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் பாதிப்பு அடைய கூடாது என்பதற்காகவும்.., அவர்களின் நலனை கருத்தில் கொண்டு மின்இழுவை ரயில் சேவை இயங்கி கொண்டு இருக்கும்., எனவும் படிப்பாதை வழியே செல்லுமாறும்.., கேட்டுக் கொண்டுள்ளது.
படிப்பாதை வழியே செல்லும் பக்தர்களுக்கு தண்ணீர் வசதி அமைத்து கொடுத்து இருப்பதால் பக்தர்கள் பயப்பட வேண்டாம் என கோவில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..