நிலவில் குழந்தையாக மாறிய ரோவர்.. இஸ்ரோ வெளியிட்ட வீடியோ..!!
நிலவில் சந்திராயன் 3 விண்கலம் ரோவர் பாதுகாப்பாக உலா வரும் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் லட்சிய விண்வெளி பணியான சந்திராயன்-3 ஆகஸ்ட் 23 ம் தேதி அன்று நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. பிரக்யான் ரோவர் விக்ரம் லேண்டரில் இருந்து சந்திர மேற்பரப்பில் கால் பதித்தது.
பின் மெல்ல மெல்ல நகர்ந்து சென்று நிலவில் ஆய்வு செய்து கொண்டு வருகிறது.., அப்போது ஒரு பெரிய பள்ளம் வந்தவுடன் தனது பாதையை மாற்றி சல்பைடு தாது இருப்பதாக கண்டறிந்துள்ளது. சந்திராயன் 3 விண்கலத்தில் ரோவர் குழந்தை போல சுற்றி வரும் வீடியோவை.., லேண்டர் படம் எடுத்து இஸ்ரோவிற்கு அனுப்பியுள்ளது.
லேண்டர் அனுப்பியுள்ள அந்த வீடியோவை இஸ்ரோ இணையத்தில் வெளியிட்டுள்ளது, பாதுகாப்பான பாதையை தேர்ந்தெடுப்பதற்காக ரோவர் நின்ற இடத்தில் சுழன்று பார்க்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
GATXUWWYDFFHN4SK64F6H3X6UVUCRGMR6BXJ4JAPT2MMG5QI5VRQLQNE
பிரக்யான் ரோவரை, லேண்டர் குழந்தை போல பார்த்துக் கொள்வதாக இஸ்ரோ கூறியுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..