ஜாமினில் வெளிவந்த ரவுடி..! நொடியில் நடந்த சம்பவம்..! வெளியான காரணம்..!
திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டியில் இருந்து மொட்டணம்பட்டி செல்லும் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் நகரில் வசித்து வந்தவர் வினோத். இவருக்கு திருமணமாகி மஞ்சுளா என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.
சரித்திர பதிவேடு குற்றவாலியான வினோத் மீது கொலை, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்தநிலையில் கடந்த 2020ம் ஆண்டு சுள்ளான் என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட வினோத், சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்தார்.
திண்டுகல்லில் இருந்தால் தனது அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதால், திருப்பூரில் வசித்து வந்தார். இந்நிலையில் மனைவி மற்றும் குழந்தைகளை திருப்பூர்க்கு அழைத்து செல்வதற்காக நேற்று மாலை வினோத் வீட்டிற்கு வந்துள்ளார்.
அங்கு அவரது தாய் மற்றும் சகோதரியுடன் அமர்ந்து உணவு அருந்திக் கொண்டிருந்தபோது, திடீரென வீட்டிற்குள் நுழைந்த 3 மர்ம நபர்கள், மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் வினோத்தை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதில் படுகாயமடைந்த வினோத் சம்பவ இடத்திலே பலியானர்.
இது குறித்து அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு புகார் அளித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வினோத்தின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்த தப்பி ஓடிய மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் 2 நாட்களுக்கு முன்பு வேடப்பட்டி பகுதியில் பாண்டி என்ற கூலித்தொழிலாளி மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டிருந்தார். அந்த பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொருவர் முன்பகையின் காரணமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
-பவானி கார்த்திக்