ரூ. 2 ஆயிரம் நோட்டு செல்லுமா? செல்லாதா? ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கம்..!

2 ஆயிரம் ரூபாய் நோட்டு குறித்து சமூக வலைதளங்களில் பரவும் செய்தியை நம்ப வேண்டாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது

 இந்தியன் வங்கி ஏடிஎம்-ல் மார்ச் 1ஆம் தேதி முதல் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் வைக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டை படிப்படியாக அரசு குறைக்க உள்ளதாக இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் தரப்பில் கூறப்பட்டது. இது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இதனால் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்படலாம் என்ற வதந்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது

இதனிடையே இதுகுறித்து பேசியுள்ள ரிசர்வ் வங்கி அதிகாரிகள் இரண்டாயிரம் ரூபாய் நோட்டை தடை செய்வதற்கான எண்ணம் தற்போது வரை மத்திய அரசிடம் இல்லை என தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான அதிகாரபூர்வமான தகவல்களும் ரிசர்வ் வங்கிக்கு தெரிவிக்கப்படவில்லை எனவும் ஏ.டி.எம். மையங்களில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வழக்கம்போல் நிரப்பப்பட்டு வருவதாக தெரிவித்த ரிசர்வ் வங்கி அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து இதுபோன்ற எந்த புகாரும் வரவில்லை எனவும் கூறியுள்ளனர்

What do you think?

மீண்டும் கவர்ச்சி, லிப்லாக் கோதாவில் களமிறங்கும் லேடி சூப்பர் ஸ்டார்!

துப்பாக்கிச் சூடு:ஆணையத்தில் ஆஜராக விளக்கு கேட்கும் ரஜினி