மனுஷ்யபுத்திரனின் விளக்கத்திற்கு நெட்டிசன்கள் பதிலடி

ஆர் எஸ் பாரதியின் சர்ச்சை பேச்சு திமுக மீதான மரியாதையை சிதைக்கும் வகையில் அமைந்திருந்ததாக அக்கட்சியினர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி இடஒதுக்கீடு குறித்து சர்ச்சையாக பேசியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து கடும் கண்டனங்கள் வந்ததையடுத்து அவர் வருத்தம் தெரிவித்தார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து சமூக வலைதளத்தில் மனுஷ்ய புத்திரன் தெரிவித்துள்ள கருத்து மீண்டும் விஷ்வரூபம் எடுத்துள்ளது.

அதில், “தான் திமுக போட்ட பிச்சையில்தான் ஆளாகியுள்ளேன் என்பதைப் பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார். அவரது இந்த கருத்தை நெட்டிசன்கள் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர். எழுத்தாளராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் மனுஷ்ய புத்திரனின் இந்த பேச்சு சுய மரியாதையைக் கேள்வி எழுப்பும் வகையில் அமைந்துள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், ஆர் எஸ் பாரதியின் வாயிலிருந்து ஒரு வார்த்தை தவறி வந்து விட்டதாகவும், அதற்கு அவர் வருத்தம் தெரிவித்த பிறகும் கட்டி வைத்து அடிப்பீர்களா என்றும் மனுஷ்ய புத்திரன் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கும் நெட்டிசன்கள் பலர் கடும் பதிலடி கொடுத்துள்ளனர். சுய மரியாதை கொள்கைகளுக்காகவே பெயர் போன திமுக இது போன்ற கருத்துகளால் தனது மரியாதையை இழந்து வருவதாக கட்சி தொண்டர்களும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

What do you think?

பருவநிலை மாற்ற எதிர்ப்பு போராட்டத்துக்கு 71,000 கோடி – அமேசான் அறிவிப்பு

உசேன் போல்ட்டை வீழ்த்திய மேலும் ஒரு கம்பாலா வீரர்