பெண்களின் முகம் அழகாக்க இது போதும்..!
பெண்களின் முகம் கவர்ச்சியாகவும் அழகாகவும் இருக்க இரவில் தூங்குவதற்கு முன் எருமை பாலில் இருந்து எடுக்கும் பாலாடையை முகத்தில் தடவி காலையில் சோப்பு போட்டு கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து பயன்படுத்த முகம் அழகு பெறும். பாலாடையை பயன்படுத்தும்போது முகம் அழகாகும்.
- நீரை கொதிக்க வைத்து அதிலிருந்து வரும் ஆவியை முகத்தில் படும்படி செய்து வர முகத்தில் பரு வராது.
- முகத்தில் உண்டாகும் கருப்பு நிறத்தை நீக்க ஜாதிக்காயை அரைத்து கருப்பு நிறத்தில் தடவி வர கருமை மறையும்.
- ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி அதனை முகத்தில் தேய்த்து ஊறவைத்து முகத்தை கழுவ வேண்டும். இப்படி செய்ய முகம் பளிச்சென்று மாறும்.
- மஞ்சள் பயன்படுத்தி குளிக்கும் பெண்களுக்கு சருமம் சற்று கலராக மாறும். அப்படி மஞ்சள் தேய்க்க விரும்பாத பெண்கள், ஆரஞ்சு பழத்தோலை காயவைத்து அதனை குளிக்கும் நேரத்தில் தேய்த்து குளித்து வர சருமம் சிவப்பாக மாறும்.
- முகத்தில் பருக்கள் வந்து அந்த பருக்கள் போனதும் தழும்புகள் இருக்கும். அது அவ்வளவு சீக்கிரத்தில் மறையாது. இதனை மறைய செய்ய இளநீரில் சிறிது எலுமிச்சை சாறு, வெள்ளரிச்சாறு கலந்து தழும்புகள் உள்ள இடத்தில் நன்றாக தடவி மசாஜ் செய்து வர நல்ல மாற்றம் தெரியும், ஆனால் இதனை தொடர்ந்து செய்ய வேண்டும்.
- நடிகைகள் முகத்தை அழகாக மாற்ற முட்டையின் மஞ்சள் கருவை எடுத்து முகத்தில் தடவி காயவிட்டு சோப்பு போட்டு கழுவி வருகிறார்கள், இதனையும் நீங்கள் பயன்படுத்தலாம்.
- முகம் பளிச்சென்று மின்ன பப்பாளி பழத்தை முகத்தில் தேய்த்து வர பளப்பளப்பாகும்.
- முக்கியமானது வயிற்றில் மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இப்படி பார்த்துக் கொண்டாலே முகம் தானாக அழகு பெறும்.