ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக் பற்றி வைரலாக பரவும் வதந்தி..!! அப்படி என்னவா இருக்கும்..?
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக் இறந்து விட்டதாக கூறி தவறான செய்தி ஒன்று வைரலாக பரவி வருகிறது.., ஆனால் அவர் உயிருடன் இருக்கும் பொழுது எதற்காக இந்த பொய்யான செய்தி பரப்பப்பட்டது, யார் இந்த தகவலை பரப்பி இருப்பார்கள் என அவரின் நண்பர் ஹென்றி ஒலாங்கா கேள்வி.
இன்று காலை ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக் புற்று நோயால் இறந்து விட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் வேகமாக பரவி வருகிறது. அதிலும் கொடுமை அவர் உயிரிழந்ததாக கிரிக்கெட் வீரர்ளான இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சேவாக், வாசிம் ஜாபர் மற்றும் அஸ்வின் உள்ளிட்டோர் ஹீத் ஸ்ட்ரீக் குடும்பத்தினருக்கு ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்த வதந்தி களுக்கு முற்று புள்ளி வைப்பதற்காக.., ஹீத் ஸ்ட்ரீக் நண்பர் ஹென்றி ஒலாங்கா ஹீத் ஸ்ட்ரீக் மரணம் அடையவில்லை என ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தெரிவித்துள்ளார்.
மேலும் “ஹீத் ஸ்ட்ரீக்கின் மறைவு பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம்.., அது பொய் என என்னால் உறுதிப்படுத்த முடியும். இதை நான் அவரிடம் கேட்டேன்.. அவர் உயிருடன் தான் இருக்கிறார்” என ஹென்றி ஒலாங்கா தெரிவித்துள்ளார்.
49 வயதான ஹீத் ஸ்ட்ரீக், ஜிம்பாப்வே அணிக்காக 65 டெஸ்ட், 189 ஒருநாள் போட்டிகளில் ஆடி உள்ளார்.
சில காலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் அவர் தென்ஆப்ரிககாவில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் நேற்று உயிர் இழந்தார். என பொய்யான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. அவை அனைத்தும் பொய் இதை ரசிகர்கள் நம்ப வேண்டாம் என ஹென்றி ஒலாங்கா கேட்டுக்கொண்டுள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..