‘பூந்தமல்லியில் கொரோனாவால் 12 பேர் உயிரிழப்பா?’ வதந்தி பரப்பிய இருவர் கைது!

பூந்தமல்லியில் 12 பேர் கொரோனாவால் உயிரிழந்ததாக வதந்தி பரப்பியவர்கள் கைது.

கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இதே போல் கொரோனா குறித்த வதந்திகளும் அதிகமாக பரவி வருகின்றன. இவ்வாறு கொரோனா குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பூந்தமல்லியில் உள்ள பொது சுகாதார நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த 12 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததாகவும், இதனால் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியது.

இந்த தகவல் வேகமாக பரவி வந்த நிலையில் இதுகுறித்து விசாரணை நடத்திய பூந்தமல்லி போலீசார் செல்போன் நம்பரை வைத்து காட்டுப்பாக்கத்தை சேர்ந்த சிவகுமார் மற்றும் மலையம்பாக்கத்தை சேர்ந்த பெஞ்ஜமின் ஆகிய இருவரும் வதந்தி பரப்பியதற்க்காக கைது செய்தனர்.

விசாரணையில் தனியார் கார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் சிவகுமார் அவரது நிறுவனத்தில் விடுமுறை அளிக்க வேண்டும் என்பதால் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியுள்ளார் என்பது தெரியவந்தது இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.

What do you think?

‘அருவா படத்திற்காக புதிய கெட்டப்பில் சூர்யா’ வைரலாகும் புகைப்படம்!

இங்கிலாந்தில் முழு அடைப்பு – பிரதமர் அதிரடி உத்தரவு