இந்தியர்கள் வெளியேற, உக்ரைன் மீதான போரை தற்காலிகமாக நிறுத்துவதாக மீண்டும் ரஷ்யா அறிவித்துள்ளது.
கடந்த 24 ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தனது கொடூர தாக்குதலை தொடங்கியது. கடந்த 13 நாட்களுக்கு மேலாக தீவிர தாக்குதல்கள் மூலம் உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றியது.
இதற்கிடையில் போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நேற்று(மார்ச்.07) நடைபெற்ற மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது.
இந்நிலையில், உக்ரைனில் 5 நகரங்களில் மனிதாபிமான நடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில்,போர் நிறுத்தம் செய்வதாக ரஷ்யா மீண்டும் அறிவித்துள்ளது.
அந்த நகரங்களில் சிக்கியுள்ள இந்தியர்கள் வெளியேற உதவுவதற்காகவும், அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு மருந்து, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கான வாய்ப்புகளுக்காகவும் மனிதாபிமான அடிப்படையில் போரை நிறுத்துவதாக ரஷ்யா விளக்கம் அளித்துள்ளது.