உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக 17 நாடுகளை நட்பு நாடு பட்டியலில் இருந்து நீக்கி ரஷ்யா அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
கடந்த 24 ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தனது கொடூர தாக்குதலை தொடங்கியது. கடந்த 12 நாட்களுக்கு மேலாக தீவிர தாக்குதல்கள் மூலம் உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றியது.
இதையடுத்து, போர் பகுதியில் இருந்து மக்களை பாதுகாப்பாக மீட்க மனிதாபிமான அடிப்படையில் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், ரஷ்யா உக்ரைன் உடனான போரை கை விட்டு பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் உக்ரைன் எல்லையில் இருக்கும் ரஷ்ய நட்பு நாடான பெலாரஸில் இரு கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
இந்நிலையில், 17 நாடுகளை நட்பு நாடு பட்டியலில் இருந்து ரஷ்யா அதிரடியாக நீக்கியுள்ளது. அதன்படி, ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்கள் பெயர், ஐஸ்லாந்து, ஜப்பான், மொனாக்கோ, மாண்டினீக்ரோ, நியூசிலாந்து, நார்வே, தைவான், சான் மரினோ, சிங்கப்பூர், எஸ் கொரியா, சுவிட்சர்லாந்து, உக்ரைன், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 17 நாடுகளை நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து ரஷ்யா நீக்கியுள்ளது.
உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருவதால், ரஷ்யாவுக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து பொருளாதார தடை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது குறிப்பிடத்தக்கது.