‘Free Pass’ இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய மகளிர் அணியை விமர்சிக்கும் தெ. ஆ.கேப்டன்!

இந்திய மகளிர் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியதை Free Pass என்று தென்னாப்பிரிக்க மகளிர் அணியின் கேப்டன் விமர்சித்துள்ளார்.

தற்போது மகளிருக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் வைத்து நடைபெற்று வருகிறது. இதில் இறுதிப்போட்டிக்கு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் முன்னேறியுள்ளன. முதல் அரையிறுதி போட்டி மழையின் காரணமாக தடைப்பட்டதால் இந்திய மகளிர் அணி புள்ளிகளின் அடிப்படையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

2வது அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைய ஆஸ்திரேலியா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில் இந்த போட்டியும் மழையால் தடைப்பட்டிருந்தால் இந்தியாவை போல தென்னாப்பிரிக்காவும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்குமே என்று தென்னாப்பிரிக்க கேப்டன் வான் நீகெர்க்கிடம் கேள்வி எழுப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர் கூறுகையில், “நான் மைதான ஊழியர்களுக்கு நன்றி சொல்லி கொள்கிறேன்.அவர்கள் நாங்கள் விளையாடுவதற்காக கடுமையான முயற்சிகளை மேற்கொண்டார்கள்.

நாங்கள் இங்கே கிரிக்கெட் விளையாட தான் வந்தோம். உலக கோப்பை இறுதி போட்டிக்கு ‘Free Pass ’ பெறுவதை விட தோல்வியை ஏற்பேன் என்றும் மேலும் எதிர்காலத்தில் அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகளுக்கு ரிசர்வ் டே தேவை’’ என்றும் தெரிவித்துள்ளார்.

What do you think?

‘நீ அந்த காலேஜ்ல தான படிக்கிற’ சென்னையில் கல்லூரி மாணவருக்கு கத்திக்குத்து!

“பேராசிரியர் இழப்பு வேதனைக்குரியது” – கமல் இரங்கல் டிவிட்