சச்சினுடன் பாக்ஸிங் – இர்பான் பதான் மகனின் வைரல் வீடியோ

சச்சின் டெண்டுல்கருடன் இர்பான் பதான் மகன் இம்ரான் பாக்ஸிங் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உலக சாலைப் பாதுகாப்பு டி-20 தொடர் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட்ஸ் அணியை இந்திய லெஜெண்ட்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இப்போட்டிக்குப் பிறகு கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருடன் இர்ஃபான் பதான் மகன் இம்ரான், பாக்ஸிங் செய்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து தனது டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள இர்ஃபான் பதான், இம்ரான் என்ன செய்தான் என்று அவனுக்கு இப்போது தெரியாது, ஆனால், வளர்ந்ததும் சச்சினுடன் பாக்ஸிங் செய்தோம் என்பது அவனுக்கு தெரியும் என கூறியுள்ளார்.

இம்ரானுடன் விளையாடியது மகிழ்ச்சியளிப்பதாக சச்சினும் தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். இதேபோல் மற்றொரு வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், மைதானத்தின் உள்ளே யூசுப் பதானுடன் இருக்கும் இர்பான் பதானின் மகன் இம்ரான், அங்கு புல்தரையில் அமர்ந்திருக்கும் முஹம்மது கைஃப்பின் தோள் மீது ஏறி விளையாடுகிறான். இந்த வீடியோவையும் கிரிக்கெட் ரசிகர்கள் பலர் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

What do you think?

‘கொரோனாவால் தள்ளிவைக்கப்பட்ட உலகக்கோப்பை – ஐபிஎல் ரத்தாகுமா?’

‘தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு’ 2 பெண்கள் தற்கொலை முயற்சி!