சச்சின், சேவாக், யுவராஜ் : டி-20 போட்டியில் புதிய அவதாரம்

இந்தியாவில் நடக்கவுள்ள ‘ரோடு சேஃப்டி சீரியஸ்’ என்ற கிரிக்கெட் தொடரில் சச்சின், சேவாக், யுவராஜ் சிங் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திர வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.

மகாராஷ்டிரா அரசின் சாலைப்பாதுகாப்பு பிரிவு தனியார் நிறுவனத்துடன் இணைந்து `ரோடு சேஃப்டி வேர்ல்டு சீரியஸ்’ என்ற டி-20 தொடரை நடத்துகிறது. இதில் 100-க்கும் மேற்பட்ட முன்னாள் வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இந்தியா லெஜண்ட்ஸ், ஆஸ்திரேலியா லெஜண்ட்ஸ், இலங்கை லெஜண்ட்ஸ், வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட்ஸ், தென்னாப்பிரிக்கா லெஜண்ட்ஸ் என மொத்தம் 5 அணிகள் கலந்துகொள்கின்றன.

இறுதிப்போட்டியுடன் சேர்த்து மொத்தம் 11 போட்டிகள் நடக்கவுள்ளன. இந்தப்போட்டிகள் அனைத்தும் மும்பை, புனே நகரங்களில் நடக்கவுள்ளன. மார்ச் 7-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை நடக்கின்றன. போட்டிகள் அனைத்தும் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

இப்போட்டியில் இந்திய அணியின் முன்னாள் வீரர்களான சச்சின், சேவக், யுவராஜ் சிங், முஹம்மது கைஃப் உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்று விளையாடுகின்றனர். மேலும், ஆஸ்திரேலியாம் தென்னாப்பிரிக்கா, இலங்கை ஆகிய நாடுகளின் முன்னணி வீரர்களும் கலந்துகொண்டு விளையாடுகின்றனர்.

இந்த தொடரில் விளையாடுவது குறித்து அதிரடி ஆட்டக்காரர் சேவக் கூறுகையில், “சாலைப் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு அவசியம். சாலைப் பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு மேற்கொண்டுள்ள இந்த முயற்சியை நான் வரவேற்கிறேன். இந்தப் போட்டி குறித்து நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். ஏனென்றால் மீண்டும் சச்சினுடன் விளையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கும்.

நானும் சச்சினும் பல சர்வதேசப் போட்டிகளில் ஒன்றாக விளையாடியுள்ளோம். இப்போது கொஞ்சம் இடைவெளி இருந்தது. பின்னர் ஆல் ஸ்டார் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினோம். இப்போது மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. டெண்டுல்கருடன் விளையாடுவதை நான் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

What do you think?

அன்பழகனின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய துணை முதலமைச்சர்!

தமிழகம் வந்திறங்கியது கொரோனா! – காஞ்சிபுரத்தை சேர்ந்தவருக்கு தீவிர சிகிச்சை