வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்..!
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 18வது வார்டு மடத்துப்பட்டி தெருவை சேர்ந்த வள்ளிநாயகம் என்பவரது மனைவி நாச்சியார்(85). வள்ளிநாயகம் உயிர் இழந்த நிலையில் மூதாட்டி நாச்சியார் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு நாச்சியார் அருகே வசிப்பவர்களிடம் பேசிவிட்டு, வீட்டிற்கு தூங்கச் சென்றார். இன்று காலை அக்கம்பக்கத்தினர் எழுந்து பார்த்தபோது நாச்சியார் வீட்டின் மேற்கூரை இடிந்து கிடந்தது.
உள்ளே இடிபாடுகளுக்குள் நடுவே சிக்கிய நாச்சியார் பரிதாபமாக உயிரிழந்து கிடந்துள்ளார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மூதாட்டியின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுகாக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து தகவலறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்