“கவர்ச்சியில் நடிக்க எனக்கு…” மனம் திறந்த சாய் பல்லவி..!!
மலையாள படத்தின் மூலம் சினிமா உலகில் கால் பதித்தவர் “சாய்பல்லவி”.. கடந்த 2013ம் ஆண்டு வெளியான பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமானவர் சாய்பல்லவி.. முதல் படத்திலேயே ரசிகர் பட்டாளத்தை ஈர்த்தவர்..
அதன் பின்னர் மலையாளத்தில் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு படங்களிலும் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார்..
தற்போது சிவகார்த்திகேயனுடன் அமரன் படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகின்ற தீபாவளி அன்று வெளியாகவுள்ளது..
அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் பான் இந்தியா படமாக தயாராகும் “ராமாயணம்” படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.
சாய்பல்லவி பொறுத்தவரையில் அதிகம் மேக்கப் போடுவதும் கிடையாது, கவர்ச்சியாக உடை அணிவதும் கிடையாது..
அதேபோல் பொது நிகழ்ச்சிகளில் கூட பாரம்பரிய உடையான புடவை அணிந்து கொண்டு வருவது வழக்கம்..
இதுவரை சாய்பல்லவி நடித்த படங்களிலும் சரி பங்கேற்ற பொது நிகழ்ச்சிகளிலும் சரி அவர் கவிர்ச்சியான உடை அணிந்தது கிடையாது அதற்கான காரணம் குறித்து நடிகை சாய்பல்லவி தெரிவித்துள்ளார்…
“சினிமாவில் வருவதற்கு முன் நான் ஒரு நடன நிகழ்ச்சியில் ஆடினேன் அதில் கவர்ச்சியான உடை அணிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதன் பின் பிரேமம் படம் ரிலீஸ் ஆன பின்னரே அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது..
அதன் பின் நான் கவர்ச்சியாக நடிக்க கூடாது என முடிவெடுத்தேன்..
மக்கள் என்னை கவர்ச்சிக்காக பார்க்க நான் ஆசைப்படவில்லை.., நான் எப்போதும் பாரம்பரியமான உடையில் மட்டுமே நடிக்க ஆசை மக்களும் என்னை இப்படியே மட்டுமே பார்க்க விரும்புகிறார்கள், அதையே நானும் விரும்புகிறேன்’ என்றார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..