எம்.பி.க்களின் சம்பளம் உயர்வு…!! ஒன்றிய அரசு அறிவிப்பு..!!
1961ம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள செலவு பணவீக்க குறியீடு அடிப்படையில், மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்பிக்களுக்கு தற்போது மாதம் சம்பளம் மற்றும் ஓய்வூதியங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், செலவு பணவீக்கக் குறியீட்டின் அடிப்படையில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு மாதச்சம்பளமாக 24 சதவீதம் உயர்த்தப்பட்டு 1 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
அதேபோல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் மாதம் 31 ஆயிரமாக வழங்கப்படும் என்றும், 5 ஆண்டுகளுக்கு மேல் எம்பியாக இருந்தவர்களுக்கு ஓய்வூதியம் மாதம் 2,500 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2018ல் அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, எம்.பி.க்களின் சம்பளத்தை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்வு
5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பளம் மற்றும் அலவன்ஸ்களை தானாக மாற்றியமைக்கும் திட்டத்தையும் அறிமுகம்
2020ம் ஆண்டில், கொரோனா பரவியபோது ஒரு வருடத்திற்கு எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்களின் சம்பளம் 30 சதவீதம் குறைவு
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் :
மாதம் சம்பளம் 1.24 லட்சம் ரூபாய்
தொகுதி உதவித்தொகை மாதம் 70,000 ரூபாயில் இருந்து 87,000 மாக உயர்வு
அலுவலகச் செலவு மாதம் ரூ.75,000 ரூபாய்
75,000 ரூபாய் அலுவலகச் செலவு, கணினி அறிவு பெற்ற ஒருவரின் சேவையைப் பெற மாதம் ரூ.50,000 மற்றும் எழுது பொருட்கள் வாங்கும் செலவுக்கு 25,000ம் ஒதுக்கப்படும்.
எம்.பி.க்கள் தங்கள் பதவிக் காலத்தில் ரூ. 1.25 லட்சம் மதிப்பு நாற்காலி, சேர் வாங்க நிதி ஒதுக்கப்படும். முன்பு ரூ.1 லட்சம் ஒதுக்கப்பட்டது.
டெல்லியில் 2 படுக்கை அறை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு தங்கும் விடுதி அல்லது பங்களா ஒதுக்கப்படும்.
எம்பி மற்றும் அவரது குடும்பத்தினர் டெல்லிக்கு 34 முறை வருவதற்கு விமான டிக்கெட் வழங்கப்படும். ரயில் டிக்கெட் சலுகையும் உண்டு.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..