‘கொரோனா விழிப்புணர்விற்காக இலவசமாக வழங்கப்பட்ட சிக்கன்’ கடையை மூடிய வட்டாட்சியர்!

கொரோனா விழிப்புணர்விற்காக இலவசமாக சிக்கனை விற்ற கடையை வட்டாட்சியர் மூடினார்.

உலகம் முழுவதும் கொரானா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த கொரோனா வைரஸ் கோழியின் மூலமாக தான் பரவுகிறது என்று வதந்தி சில நாட்களாக உலா வருகின்றது. இதனால் அண்மை காலமாக கோழியின் விலை வெகுவாக சரிந்துள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் மூலம் கொரோனா பரவவில்லை என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சேலம் வாழப்பாடியில் உள்ள ஒரு சிக்கன் விற்பனை செய்யும் கடையில் ஒரு கிலோ சிக்கன் வாங்கினால் ஒரு கிலோ சிக்கன் இலவசம் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஏராளமான மக்கள் அங்கு குவிந்தனர். இரவு 10 மணிவரை மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

இதையடுத்து அந்த கடைக்கு வந்த வட்டாட்சியர் ஒரே இடத்தில் அதிகமான மக்கள் கூடுவதால் அந்த கடையை உடனடியாக மூட உத்தரவிட்டார்.

What do you think?

‘சென்னை கடற்கரைகள் மூடப்படும்’ மாநகராட்சி திடீர் அறிவிப்பு!

‘அருவா படத்திற்காக புதிய கெட்டப்பில் சூர்யா’ வைரலாகும் புகைப்படம்!