‘அரசியலுக்காக குத்துசண்டை’ சல்பேட்டாவின் கதை!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கபாலி, காலா என அடுத்தடுத்து 2 படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக மாறியவர் பா.ரஞ்சித். ரஜினியை தொடர்ந்து அவர் யாரை வைத்து படம் இயக்கப்போகிறார் என்ற கேள்வி பலரிடமும் எழுந்து வந்தது. யாரும் எதிர்பார்க்காத வகையில் அவர் நடிகர் ஆர்யாவை வைத்து படம் இயக்க தயாராகவுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக பெரிய வெற்றி கிடைக்காமல் தவித்து வரும் நடிகர் ஆர்யாவிற்கு இந்த படம் ஒரு திருப்பு முனையாக அமையலாம் என்று சினிமா வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. ஆர்யாவின் 30வது படமான இந்த திரைப்படத்திற்கு சல்பேட்டா என்று பெயர் வைத்துள்ளனர். இதற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

வடசென்னையை மையமாக கொண்ட இந்த படத்தில் நடிகர் ஆர்யா ஒரு குத்துசண்டை வீரராக வருகிறாராம்.அதற்காக அவர் கடுமையான உடற்பயிற்சி செய்து உடம்பை கட்டுக்கோப்பாக மாற்றியுள்ளார். அந்த வீடியோக்களும் இணையத்தில் வைரலாக பரவியது.

குத்துச்சண்டையை அடிப்படையாக வைத்து தமிழில் நிறைய படங்கள் வந்தபோதிலும் இந்த படம் அதிலிருந்து வேறுபட்டு நிற்கிறது. பொதுவாக இந்த மாதிரியான படங்களில் தந்தையின் லட்சியம், தன்னுடைய கனவு போன்றவற்றிற்காக கதாநாயகன் குத்துச்சண்டையை கற்றுக்கொள்வர். ஆனால் இப்படத்தில் நடிகர் ஆர்யா அரசியல் காரணங்களுக்காக குத்துச்சண்டையை கற்றுக்கொள்கிறார்.

முதலில் எந்தவித கவலையுமின்றி ஊர் சுற்றி வரும் கதாநாயகன் ஆர்யா, தன் வாழ்வின் ஒரு கட்டத்தில் எப்படி குத்துசண்டை வீரராக மாறி சமூகத்தில் நிலவும் அரசியலை எதிர்த்து போராடுகிறார் என்பதே சல்பேட்டா படத்தின் கதை என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

What do you think?

‘மீண்டும் சேப்பாக்கத்தில் தோனி’ கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

‘6வது நாளாக தொடரும் கேன் உரிமையாளர்களின் போராட்டம்’ சென்னையில் குடிநீருக்கு தட்டுப்பாடு?