வீடியோ எடுத்த ரசிகர்; எச்சரித்த சமந்தா

சமந்தாவை பின்தொடர்ந்து செல்போனில் படம் பிடித்த ரசிகரை அவர் கடுமையாக எச்சரிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணியில் உள்ள சமந்தா அடிக்கடி திருப்பதி கோயிலுக்கு செல்வது வழக்கம். அதிலும் நடந்தே செல்வது இவருக்கு பிடித்தமான ஒன்று. இந்நிலையில் சமீபத்தில் திருப்பதி கோயிலுக்கு சென்ற சமந்தாவை இரண்டு ரசிகர்கள் தொல்லை செய்துள்ளனர்.

நடந்து சென்ற சமந்தாவை ஒருவர் வீடியோ எடுத்துள்ளார், மற்றொரு ரசிகர் புகைப்படம் எடுத்துள்ளார். இதனால் கோபமடைந்த அவர் இருவரையும் கடுமையாக எச்சரித்துள்ளார். ”இங்கே பார்.., நடந்தால் ஒழுங்கா நட, வீடியோ எடுக்குற வேலை எல்லாம் என்கிட்ட வச்சிக்காத” என எச்சரித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

What do you think?

Mi Electric Tooth brush தற்போது இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது

கிரிராஜ்சிங்கை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்! – வைகோ கோரிக்கை