சமந்தாவின் ‘நெபுலைசர்’ பதிவு.. பூதகரமாக வெடித்து வரும் மருத்துவர் பதிவுக்கு சமந்தா விளக்கம்..!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் டாப் நடிகைகளில் ஒருவர் நடிகை சமந்தா. தெறி, கத்தி, நான் ஈ போன்ற பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட அவர், சினிமாவில் இருந்து விலகி சில வருடங்களாக சிகிச்சை பெற்று வந்தார்.
தற்போது குணமடைந்ததால் மீண்டும் நடிப்பில் ஆர்வம் செலுத்தி வருகிறார். அதே சமயம் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தொடர்ந்து ஃபிட்னஸ் தொடர்பான பல்வேறு பதிவுகளை பகிர்ந்து வருகிறார். சமந்தா அண்மையில், தனது ஸ்டோரியில் ‘நெபுலைசர்’ கருவியை தனது மூக்கில் வைத்தவாறு ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.
சர்ச்சை பதிவு:
அத்துடன் “ஒரு பொதுவான வைரலுக்கு மருந்து எடுத்துக் கொள்ளும் முன், ஒரு மாற்றுவழியை முயற்சி செய்து பாருங்கள். அதில் ஒரு வழி, ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் காய்ச்சி வடிகட்டிய நீர் ஆகியவற்றின் கலவையுடன் நெபுலைஸ் செய்வது” என்று குறிப்பிட்டிருந்தார். சமந்தாவின் இந்த பதிவு சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மருத்துவர் காட்டம்:
எக்ஸ் தளத்தில் மருத்துவர் ஒருவர் சமந்தாவின் பதிவை பகிர்ந்து கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார். ஹைட்ரஜன் பெராக்சைடு பயன்படுத்து முற்றிலும் உடலுக்கு தீங்கானது என அமெரிக்காவின் ஆஸ்த்மா மற்றும் அலர்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இப்படி மில்லியன் கணக்கான தனது ஃபாலோயர்களை முட்டாளாக்கும் முயற்சியில் ஈடுபட்ட நடிகை சமந்தாவை கைது செய்து அபராதம் விதிக்க வேண்டும் என அவர் காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.
சமாந்தா விளக்கம்:
இதற்கு நடிகை சமாந்த 3பக்கத்திற்கு விளக்கம் அளித்துள்ளார். அதாவது, இதுகுறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள அவர், கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நான் உபயோகிக்கும் மருந்துகள், மருத்துவ வழிமுறைகளை சுயபரிசோதனை செய்த பின்பே அடுத்தவர்களுக்கு பரிந்துரைக்கிறேன்.
இந்த மருத்துவ வழிமுறைகள், மருந்துகள் எல்லாம் மிக மிக விலையுயர்ந்தவை என்று தெரியும். இதையெல்லாம் என்னால் பெற முடிகிறது என்று நினைக்கும்போது நான் அதிர்ஷ்டசாலி தான்.
அதன் காரணமாக மாற்று சிகிச்சைகளை ஆராய ஆரம்பித்தேன். பல சோதனைகளுக்கு பிறகு எனக்கு பிரமாதமாக வேலை செய்யும் சிகிச்சைகளைக் கண்டறிந்தேன்.
அதைத்தான் மற்றவர்களுக்கு பயனளிக்க முடிந்தால் பயனளிக்கட்டுமே என்றுக் கூறினேன். டிஆர்டிஓவில் 25 ஆண்டுகள் பணியாற்றிய உயர் தகுதி வாய்ந்த மருத்துவரால் இந்த சிகிச்சை பரிந்துரைக்கப்பட்டது.
பாரம்பரிய மருத்துவத்தில் கல்வி பயின்ற போதிலும், அவர் மாற்று சிகிச்சையை பரிந்துரைத்தார். ஆனால், அதையும் தாண்டி என்னைபோல உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படும் நிறைய பேர் உள்ளனர்.
அவர்கள் மாற்று வழியையும் எதிர்பார்க்கிறார்கள். அப்படியானவர்களுக்கு என் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் விஷயத்தைத் தான் நான் கூறியிருந்தேன்.
ஹைட்ரஜன் பெராக்சைடு எனக்கு பரிந்துரைத்த மருத்துவரும் எம்டி முடித்து 25 வருடங்களுக்கு மேலாக அனுபவம் கொண்டவர் தான். நான் தவறாக பரிந்துரைக்கிறேன்.
சிறைக்குச் செல்ல வேண்டும் என்று குற்றம் சாட்டிய மருத்துவரின் பதட்டத்தையும் அவரின் நல்ல நோக்கத்தையும் புரிந்துகொள்ள முடிகிறது. என்னுடைய மருத்துவரையும் அவரையும் அமர வைத்து கலந்துரையாடல் நடத்த வேண்டும்.
மற்றபடி, என்னுடைய நோக்கம் அடுத்தவர்களுக்கு உதவுவதே தவிர காயப்படுத்துவது அல்ல என குறிப்பிட்டுள்ளார். சமந்தாவின் இந்த விளக்கம் தற்போது மீண்டும் வைரலாகி வருகின்றது.
-பவானி கார்த்திக்