‘கையில் டென்னிஸ் ராக்கெட், இடுப்பில் மகன்’ வைரலாகும் சானியா மிர்சாவின் புகைப்படம்!

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா இடுப்பில் தனது மகனுடன் மைதானத்தில் விளையாட வரும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கடந்த 2010 ஆம் ஆண்டு, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், இரண்டாண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் கடந்த 8ஆம் தேதி ஃபெட் கோப்பைக்கான தொடரில் சானியா பங்கேற்றார்.

போட்டியில் விளையாடுவதற்கு முன்பாக அவர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது இடுப்பில் தனது மகன் இஷானையும் வலது கையில் டென்னிஸ் ராக்கெட்டையும் வைத்திருந்தார்.

இந்த புகைப்படத்தை தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “எனது வாழ்க்கை இந்த புகைப்படத்தில் உள்ளது. எனக்கு வேறு வழியில்லை, இஷான் என்னை எப்போதும் ஊக்கப்படுத்தி எதை செய்தாலும், என்னால் முடிந்த அளவு சிறப்பாக செயல்பட வைக்கின்றான்” என்று குறிப்பிட்டுள்ளார்.

What do you think?

‘கொரோனா பரவுவதால் திருமண நிகழ்ச்சிகளுக்கு தடை’ மாநில அரசு அதிரடி!

கொரோனாவால் இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான ஒருநாள் தொடரும் ரத்து!