‘பிஸ்கோத்’-ஆன சந்தானம் – First Look பரபர..!

சந்தானம் நாயகனாக நடிக்கும் ’பிஸ்கோத்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.

காமெடி நடிகனாக தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருந்த சந்தானம், அதிலிருந்து விலகி தற்போது நாயகனாக மட்டுமே நடித்து வருகிறார். அவர் ஹீரோவாக நடித்து வெளிவந்த படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. இறுதியாக சந்தானம் நடித்த ‘டகால்டி’ படம் வெளியானது, அடுத்து ‘சர்வர் சுந்தரம்’ படம் வெளியாக காத்திருக்கிறது.

இந்நிலையில், ஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நடித்து வரும் ‘பிஸ்கோத்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக தாரா அலிஷா நடித்துள்ளார். இவர் ஏற்கனவே ‘ஏ 1’ படத்திலும் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

சந்தானம் – தாரா அலிஷா

முன்னதாக படத்தின் டைட்டில் ‘பிஸ்கோத்’ என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுருந்த சந்தானம், புதிய ஃப்ளேவரை சுவைக்க காத்திருங்கள் என குறிப்பிட்டிருந்தார். அதற்கேற்றவாறே ‘பிஸ்கோத்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அந்த போஸ்டரில் ரெட்ரோ ஸ்டைலில் உடையணிந்துள்ள சந்தானம், புல்லட்டில் தோட்டாக்கள் தெறிக்க செம ஸ்டைலாக வருகிறார். அவரது கையில் இருக்கும் துப்பாக்கியில் ரோஜாவும் மற்றொரு கையில் சூட்கேஸ் இருப்பது போன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

What do you think?

‘அமெரிக்காவையும் விட்டுவைக்காத கொரோனா’ 11 பேர் பலி!

கடந்த 5 ஆண்டுகளில் பிரதமரின் வெளிநாட்டு பயணத்துக்காக மட்டும் இத்தனை கோடி செலவா?