பெண்ணின் அழகை சொல்லும் புடவைகள்..!!
பெண்களின் பாரம்பரிய உடை என்றாலே அது “புடவை” தான் அந்த காலம் முதல் இந்த காலம் வரை பெண்கள் புடவை அணியும் பொழுது அவர்களின் அழகு இன்னும் கூடி விடுகிறது. எவ்வளது மாடர்ன் உடைகள் வந்தாலும் “புடவையின்” மதிப்பு மட்டும் என்றும் குறையவே குறையாது.
புடவை அணிவது அழகிற்காக மட்டுமல்ல அதிலும் ஒரு மருத்துவ குணம் அடங்கியுள்ளது. புடவையோ அல்லது தாவணியோ அணியும் பொழுது உடலில் இருக்கும் வெப்பத்தை வெளியேற்றி விடும்.
திருமணமான பெண்களை புடவை அணிய சொல்லுவதும், சீமந்தத்தின் பொழுது புடவை அணிய சொல்லுவதற்கான காரணம் , கர்பப்பையில் உள்ள வெப்பத்தை வெளியேற்றி விடும் என்பதற்காக தான்.
புடவையம் பெண்களும் :
* திருமணதிற்கு செல்லும் பொழுது புடவை, தங்க நகைகள் அணிந்து செல்லும் பொழுது, மற்றவர்களின் பார்வை நம் மீது இருக்கும்.
* கோவிலுக்கு செல்லும் பொழுது புடவை அல்லது தாவணி அணிந்து தலையில் பூ வைத்துக்கொண்டு செல்லலாம்.
* சிலருக்கு வெளி இடங்களுக்கும் புடவை அணிந்து செல்வது மிகவும் பிடிக்கும், அப்படி செல்லும் பொழுது தலைமுடியை விரித்த வண்ணம் சென்றால் அழகாக இருக்கும்.
மேலும் இதுபோன்ற பல பெண்கள் குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.
-வெ.லோகேஸ்வரி.