‘ஆட்சி கவிழ்ப்பு சதி’ சவூதி அரேபியாவில் இளவரசர்கள் உட்பட மூன்று பேர் கைது!

சவூதி அரேபியா அரசை கவிழ்க்க முயற்சித்தாக கூறி இளவரசர்கள் உட்பட மூன்று பேரை கைது செய்தார் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான்.

சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசராக இருப்பவர் முகமது பின் சல்மான். இவர் சவுதி அரேபிய மன்னர் சல்மானின் அரசை கவிழ்க்க சதி திட்டம் தீட்டியதாக கூறி அவரின் சகோதரர்களில் ஒருவரான அகமது பின் அப்துல் அசீஸ் அல் சாவ்த், மன்னரின் மருமகன் முகமது பின் நயீஃப் மற்றும் அவரின் சகோதரர் நவாஃப் பின் நயீஃப் ஆகிய மூன்று பேரையும் கைது செய்துள்ளன

இதில் அகமது பின் அப்துல் அசீஸ் அல் சாவ்த் மற்றும் முகமது பின் நயீஃப் ஆகிய இருவருமே அரியணைக்காக போட்டி போடுபவர்களாக இருந்தவர்கள். இந்த கைதின் மூலம் அதிகாரத்தை அடைவதற்கான பாதையை வலுப்படுத்தியுள்ளார் முகமது பின் சல்மான். ஏற்கனவே பாதுகாப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட பல முக்கிய துறைகளை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அவர், தமக்கு எதிராக குரலெழுப்பிய மதகுருக்கள், இளவரசர்கள், வணிகர்கள் என பலரையும் கைது செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

What do you think?

‘பொது இடத்தில் நடிகையிடம் இப்படியா நடந்து கொள்வது?’ வைரலாகும் சல்மான் கானின் வீடியோ உள்ளே:-

‘கேரளாவில் மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ்’ இந்தியாவில் 39 ஆக உயர்வு!