சவுக்கு சங்கர் ஜாமின் மனு விசாரணை..! நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு..?
பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் மீது அடுத்தடுத்து 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், கடந்த 12ஆம் தேதி குண்டர் சட்டத்தில் சவுக்கு சங்கரை சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
இதைத்தொடர்ந்து சவுக்கு சங்கரின் தாயார் தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர்.
இந்நிலையில், யூடியூபர் சவுக்கு சங்கர் வழக்கு விசாரணை தொடர்பாக நீதிபதி சுவாமிநாதனை தொடர்பு கொண்ட இரு அதிகாரமிக்க நபர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தாமாக முன்வந்து சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மேலும், நீதிபதி சுவாமிநாதன், அந்த நபர்கள் யார் என்பதை வெளிப்படுத்தாததால், அவர்களை கண்டறிய சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூபா் சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை மே 30-ஆம் தேதிக்கு மதுரை போதைப் பொருள் தடுப்பு முதன்மை நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டது.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..