பல பெண்களை திருமணம் செய்த வாலிபர்..!! போலீஸ் வலை வீச்சு…!!
பல பெண்களை திருமணம் செய்த நபர் தன் மகளை கடத்தி சென்று திருமணம் செய்து சமூக வலைதளங்களில் போட்டோ வெளிட்ட நபரை கைது செய்யக்கோரி தாய் மயிலாடுதுறை மாவட்ட எஸ்பியிடம் புகார் மனு:-
மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் காவல் சரகம் எடுத்துக்கட்டி பூதனூர் கிராமத்தை சேர்ந்த சுந்தராம்பாள் என்பவர் மயிலாடுதுறை எஸ்.பி.அலுவலகத்தில் அளித்த புகாரில் தனது மகள் சியாமளாதேவி (வயது 23) கல்லூரி படிப்பு முடித்த இவர் கடந்த ஜனவரி 27ம் தேதி முதல் காணவில்லை பொறையார் போலீசில் புகார் செய்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை
இந்நிலையில் தனது மகளை திருமணம் செய்துகொண்ட கோளத்தில் சமூக வலைதளங்களில் ஒரு போட்டோ வெளிவந்தது. அதனை கொண்டு விசாரணை செய்தபோது திருமணம் செய்தவர் தரங்கம்பாடி தாலுகா அரசலங்குடி கிராமத்தை சேர்ந்த மோகனக்கண்ணன் என்பது தெரியவந்தது. தனியார் பஸ் டிரைவராக வேலைபார்தத மோகனக்கண்ணன் ஏற்கனவே பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கைவிட்டது தெரியவந்தது.
பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த மோகனக்கண்ணன் தனது மகளை ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று திருமணம் செய்துள்ளார். உடனடியாக தனது மகளை அவரிடமிருந்து மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த மோகனக்கண்ணனை கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..