கூந்தல் உதிர்வு பிரச்சனைக்கு குட் பாய் சொல்லுங்க..! இதை ட்ரை பண்ணுங்க..!!
பலரும் இன்றும் சந்திக்கும் ஒரு பெரிய சவால் கூந்தல் உதிர்வு பிரச்சனை அவற்றை சரி செய்வது மிக சுலபம் அதற்கான ஒரு டிப்ஸ்..
தயிர் மற்றும் வெந்தயம் :
வெந்தயமானது முடியின் வேர்களை வலுப்படுத்துவதுடன் சரியான ஊட்டத்தை அளிக்கிறது, கூந்தல் உதிர்வை குறைப்பது மட்டுமின்றி அவை அதிகமாக வளரவும் உதவுகிறது. இவை முடியின் வேர்களில் ஆழமாக ஊடுருவி வேர்களை வலுப்படுத்துகிறது.
அதை எப்படி தாயார் செய்வது என்பது பற்றி பார்க்கலாம்:
1ஸ்பூன் வெந்தயத்தை எடுத்து பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும், அந்த பொடியை தயிரில் கலந்து தலை முழுவதும் தடவ வேண்டும். 15நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் தலைக்கு குளிக்க வேண்டும்.
வாரத்திற்கு இருமுறை இதை செய்தால் கூந்தல் உதிர்வு நின்று விடும், கூந்தலும் அதிகமாக வளரும்.
மேலும் இதுபோன்ற பல அழகு குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..