LOLLOL LoveLove

“Minimum Balance தேவையில்லை” SBIன் அதிரடி அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

SBI Bank நிர்வாகம் இனி வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச வைப்புத்தொகையை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று அறிவித்துள்ளது.

இந்தியாவின் முன்னணி வங்கிகளில் முக்கியமானது SBI Bank. இந்த SBI Bankல் மாநகரம் சேமிப்பு கணக்கு என்றால் ரூ.3000 குறைந்தப்பட்ச இருப்புத் தொகையாகவும், அதே போல் நகரம் மற்றும் கிராமப் புற பகுதிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் என்றால் முறையே , ரூ.2000, ரூ.1000 என தங்களது வங்கிக் கணக்கில் வைத்திருக்க வேண்டும்.

அப்படி, குறைந்தப்பட்ச தொகையை வைத்திருக்காத வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கிலிருந்து 5 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை அபராதமாக வசூலிக்கப்படும்.

இந்நிலையில், SBI நிர்வாகம் இனி வாடிக்கையாளர்கள் இந்த குறைந்தபட்ச வைப்புத்தொகையை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று அறிவித்துள்ளது. குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லை எனக் கூறி அடிக்கடி பணம் எடுக்கப்பட்டு வந்ததால் வாடிக்கையாளர்கள் பலர் எஸ்பிஐ சேமிப்பு கணக்கை பயன்படுத்துவதை நிறுத்தியுள்ளனர்.

இதனால் தான் SBI நிர்வாகம் இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது அந்த வங்கி வாடிக்கையாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

மேலும் சந்திரசேகர் கவுட் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் SBIல் குறைந்தப்பட்ச தொகையை வைத்திருக்காத வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கிலிருந்து வசூலிக்கப்பட்ட அபாரதம் குறித்து கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த மும்பை பாரத ஸ்டேட் வங்கி “2019 ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி வரை முதல் காலாண்டு வரை பாரத ஸ்டேட் வங்கி 388 கோடி வங்கி கணக்குகளில் குறைந்த இருப்பு தொகை வைத்திருந்ததாக 235 கோடி ரூபாயை அபராதமாக வசூலித்ததாக தெரிவித்துள்ளது” என்பது குறிப்பிடத்தக்கது.

What do you think?

கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை – அரசியல் திட்டத்தை அறிவித்த ரஜினிகாந்த்!

விஜய் வீட்டில் மீண்டும் வருமான வரித்துறையினர் சோதனை!