பள்ளி மாணவிக்கு பாலியல் சீண்டல்…!! போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது…!!
வாணியம்பாடியில் 7 ஆம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியில் 7ம் வகுப்பு பள்ளி மாணவி வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை நோட்டமிட்ட அதே பகுதியை சேர்ந்த ஜமீர் அஹமத் (வயது 29). அந்த மாணவியின் வீட்டிற்கு சென்று அவரை தாக்கி பாலியல் தொல்லை கொடுத்து பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
மாணவியின் தாய் வீட்டிற்க்கு வந்து பார்த்த போது மகளின் நிலையை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.. பின்னர் இதுகுறித்து கேட்டபோது, மாணவி நடந்த சம்பவத்தை தாயிடம் கூறி அழுதுள்ளார். அதனை தொடர்ந்து மாணவியின் தாய் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
புகாரின் பேரில் போலீசார் ஜமீர் அஹமத்(29) என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..