‘கொரோனா வைரஸ் அறிகுறியால் விடுப்பு வேண்டும்’ தலைமை ஆசிரியருக்கு கடிதம் எழுதிய மாணவர்!

தனக்கு கொரோனா வைரஸ் அறிகுறி ஏற்பட்டுள்ளதாக கூறி மாணவர் ஒருவர் பள்ளி தலைமை ஆசிரியருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

கொரோனா வைரஸ் பீதி உலகம் முழுவதும் உள்ள மக்களை அச்சுறுத்தி வருகிறது. தமிழகத்தில் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா இருப்பதால் தமிழகத்திலும் இந்த கொரோனா வைரஸ் அச்சம் தொற்றிக்கொண்டுள்ளது. ஆனால் சுகாதாரத்துறையோ கொரோனா குறித்து பயப்படவேண்டாம் அதே சமயம் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் குறித்து பல வகைகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த வாரம் பள்ளிக்கல்வித் துறை சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது.

அதில். “கொரோனா வைரஸ் குறித்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் மேலும் மாணவர்கள் கைக்குட்டையை பயன்படுத்த அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் குறிப்பாகக் காய்ச்சல், சளி இருந்தால் பள்ளிக்கு வருவதைத் மாணவர்கள் தவிர்க்க வேண்டும்” என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, மற்ற மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் அச்சத்தால் நீண்ட நாள் விடுப்பு தரவேண்டும் என்று மாணவர் ஒருவர் பள்ளி தலைமை ஆசிரியருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை முகலிவாக்கத்தைச் சேர்ந்த 8ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர் எழுதிய இந்த கொரோனா வைரஸ் கடிதம் இணையத்தில் வைரலாக பரவியது.

அதில்,”நான் தங்கள் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கிறேன். தற்போது நாட்டில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அது எளிதில் பரவக்கூடிய வைரஸ். எனக்குச் சளி, காய்ச்சல் அறிகுறி தெரிகிறது. எனவே மற்ற மாணவர்களின் நலன் கருதி எனக்கு நீண்ட நாள் விடுப்பு தர வேண்டும். சளி, காய்ச்சல், இருமல் அறிகுறி உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டாம் என்று அரசாங்கமும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

Leave Letter

ஆகையால் நான் மற்ற மாணவர்களின் நலன் கருதி நீண்ட விடுப்பு எடுக்கிறேன். எனது விடுப்பு நாட்களை வருகை நாளாகப் பதிவு செய்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று எழுதியுள்ளார்.

இந்த கடிதம் தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் மாணவனை அழைத்து கண்டித்தாக கூறப்படுகிறது.

What do you think?

மீண்டும் மன்ற நிர்வாகிகளை சந்திக்கிறார் ரஜினிகாந்த்!

‘இலங்கை லெஜண்ட்ஸை பேட்டிங்கால் துவம்சம் செய்த இர்பான் பதான்’ இந்திய லெஜண்ட்ஸ் வெற்றி!