திருச்சி மாவட்டம் துறையூரில் தனியார் பள்ளி ஆசிரியையிடம் டியூசன் பயில வந்த 16 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஆசிரியை போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.
துறையூர் அருகே உள்ள வளையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தேவி (40). துறையூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் சித்திரப்பட்டி என்ற கிராமத்தில் தங்கியிருந்து டியூஷன் எடுத்து வந்தார். இவரிடம் அதே பள்ளியில் படிக்கும் துறையூரை சேர்ந்த 16 வயது மாணவன் ஒருவன் ஆசிரியை தேவியிடம் டியூசன் படித்து வந்துள்ளார்.
அந்த மாணவனுக்கு ஆசிரியை தேவி மனக்கணக்கு சொல்லித் தந்ததோடு
தனது மனக்கணக்கையும் தெரிவித்துளார். ஆனால் அந்த பிஞ்சு நெஞ்சுக்கு ஆசிரியை சொன்னது விளங்கவில்லை. ஒரு கட்டத்தில் ஆசிரியை எல்லை மீறியுள்ளார்.
கடந்த மாதம் 27 ஆம் தேதி அந்த சிறுவனுக்கு ஆசிரியை பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுவன் தனது பெற்றோரிடம் கூறியதையடுத்து முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆசிரியை தேவி மீது மாணவனின் பெற்றோர் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் அடிப்படையில் முசிறி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் ஆசிரியை தேவியை போக்சோ வழக்கில் கைது செய்தனர். டியூசன் வந்த சிறுவனிடம் பாலியல் தொந்தரவு செய்த பள்ளி ஆசிரியை கைது செய்யப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.