சரவணா ஸ்டோர்ஸுக்கு சீல்

அரசின் உத்தரவை மீறி திறக்கப்பட்ட சரவணா ஸ்டோர்ஸ் கடைக்கு அரசு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் தமிழக அரசு வாரும் மார்ச் 31ம் தேதி வரை வணிகவளாகங்களை மூடுமாறு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் நேற்று பிற்பகல் 2 மணியளவில் திறக்கப்பட்டது. இதனை அறிந்து அங்கு சென்ற அதிகாரிகள் கடையை அடைக்குமாறு அறிவுறுத்தினார்.
இந்நிலையில் மீண்டும் அந்த கடை அரசின் உத்தரவை மீறி திறக்கப்பட்டது. இதனையறிந்த அரசு அதிகாரிகள் அந்த சரவணா ஸ்டோர்ஸ் கடைக்கு சீல் வைத்தனர்.

What do you think?

-1 points
Upvote Downvote

‘போட்டி ரத்து’ முதல்வருடன் மோதுகிறாரா கங்குலி?

‘A வகை ரத்தம்’ இருந்தால் கொரோனா வருமா? சீனாவின் பகீர் தகவல்!