சூரசம்ஹாரம் இரண்டாம் நாள்.. வழிபாடு..!! இதை செய்ய மறக்காதீங்க..!!
ஆறுமுகசாமி :
சரவண பொய்கையில் மலர்ந்திருந்த தாமரை மலர்கள் மீது கொண்டு சேர்த்தான். அந்த ஆறு தீப்பொறியும் குழந்தைகளாக உருவெடுத்தனார்..
அவர்களை ஆறு கார்த்திகை பெண்கள் வளர்த்தனர்., அந்த ஆறு குழந்தைகளை தான் ஆறுமுகம் கொண்ட முருகராக தோன்றியதாக புராண கதைகள் சொல்லுகிறது.. இதானாலேயே முருகர் “ஆறுமுகசாமி” என அழைக்கப்பட்டார்.
சூரசம்ஹாரம் வரலாறு :
மேலும் தேவ குரு பிரகஸ்பதி மூலம் முருகப்பெருமான் அசுரர்களின் வரலாற்றினை அறிந்து திருக்கரத்தில் வேலேந்தி, “தேவர்களே இனி நீங்கள் அசுரர்களை கண்டு அஞ்சத்தேவையில்லை.. உங்கள் குறைகளை நீக்கி அருள் செய்வதே எனது வேலை” எனக்கூறினார்…
அசுரர்களை அழிக்க நினைத்த முருகன் முதலில் காசிபன் மகனின் எல்லா சேனைகளையும் ஐந்தே நாளில் அழித்தார்.., அதில் ஆறாம் நாள் எஞ்சியவன்தான் சூரபத்மன்.
அந்த, சூரபத்மனிடம் முருகப்பெருமான் தனது சேனைத்தலைவரான வீரபாகுபை தூது அனுப்பி அவனை திருந்தும்படி எச்சரித்தார். ஆனால் சூரபத்மன் கேட்கவில்லை.,
அதன் பின்னர் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து சூரனை வதம் செய்வதற்காக முருகரை அனுப்பி வைக்கின்றனர்..
ஆனால் சூரனோ கடலின் நடுவில் நின்று கொண்டு வீர மகேந்திரபுரி என்ற பட்டணத்தை எழுப்பி அங்கே வசித்து வந்தான். முருகனும் அந்த நகரை அடைந்தார்.
சூரன் முருகப்பெருமானை பார்த்து, “உன்னைப் பார்த்தாலே பரிதாபமாக இருக்கிறது. நீயா என்னைக் கொல்ல வந்தாய்..? என கேளி செய்தான்.
முருகன் தனது உருவத்தைப் பெரிதாக்கி அவனை பயமுறுத்தியதோடு, சக்தி வாய்ந்த ஏழு பாணங்களை எய்தார்.
சூரனுக்கோ, ஒரு சிறுவனை கொல்வது தனது வீரத்துக்கு இழுக்கு என்பதால் முருகனைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு வரவில்லை.
இதனால் முருகப்பெருமானும் அவனைக் கொல்லாமல் ஆட்கொள்ள முடிவெடுத்து, தனது விசுவரூபத்தை அவனுக்குக் காட்டியதால் அதைப் பார்த்தவுடனேயே சூரனின் ஆணவம் மறைந்து ஞானம் பிறந்தது.
சூரனும் “உன்னை பயமுறுத்த மாறிய கடலின் வடிவாக இங்கு தங்குகிறேன். உன்னைத் தேடி வரும் பக்தர்கள் என்னில் வந்து நீராடியதுமே அவர்களின் ஆணவம் நீங்கி, உனது திருவடியே கதி என சரணம் அடையும் புத்தி பெற வேண்டும்’ எனக்கூறி., அந்த வரத்தை அவனுக்கு அளித்தார் முருகர்.
ஆனால், சூரனுக்கு ஆணவம் தலைதூக்க அவன் மாமரமாக மாறி தப்ப முயன்றான்… முருகப்பெருமான் தனது தாய் உமா தேவியிடம் ஆசி பெற்று வாங்கிய வேலாயுதத்தை மாமரத்தின் மீது எய்தவுடன் மாமரம் இரண்டாகப் பிளந்தது.
அதில் ஒரு பாதியை மயிலாகவும் மறுபாதியை சேவலாகவும் மாற்றிய முருகன், தனது வாகனமாகவும் கொடி சின்னமாகவும் ஆக்கினார்..,
சூரன் மாமரமான இடம் மாம்பாடு என்று இன்றும் அழைக்கப்படுகிறது. இன்றும் இங்கு மாமரம் தழைப்பதில்லை.
பகைவனுக்கும் அருளும் பரம காருண்ய மூர்த்தியானவர் முருகன். சூரனை வதம் செய்யாமல் அவனை ஆட்கொண்டார். ஏனென்றால், உயிரைக் கொல்லும் ஆயுதம் அல்ல வேல். அது ஆணவத்தை அழித்து நற்கதி தரும் பரமானந்த வழிபாட்டு பொருள். அதனால்தான், “வேல் வேல் வெற்றிவேல்” என்றும் வழங்குகிறார்கள் பக்தர்கள்.
கந்தபெருமானால் ஐப்பசி சஷ்டி திதியில் சூரனின் வதம் நிகழ்ந்ததால் இது கந்த சஷ்டி ஆயிற்று. கந்த சஷ்டி திருநாளில் சக்தி வேலுடன் கூடிய முருகப்பெருமானை வணங்கி நற்கதி பெறுவோம்…
முருகன் வழிபாடு :
இன்று சூரசம்ஹாரம் முடிந்து இரண்டாம் நாள் நேற்று மாலை முதலே அனைத்து முருகன் கோவிலிலும் மிகுந்த விஷேசமாக இருக்கும்..
ஆனால் இன்றைய நாளில் அதிகாலையில் எழுந்து முருகன் மற்றும் சிவன் உள்ள கோவிலுக்கு சென்று.. முருகருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்யலாம்..
மேலும் சிவ பெருமானுக்கு இன்றைய நாளில் வில்வ இலைக்கொண்டு அரச்சனை செய்தால் பாவங்கள் நீக்கி புண்ணியத்தை கொடுக்கும்..
காலையில் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய முடியாதவர்கள் மாலை நேரத்திலும் சென்று வழிப்பாடு செய்யலாம்..
இன்றைய நாளில் முருகரன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது சிறந்த பலனை கொடுக்கும்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..