மாணவிகளின் கழிவறையில் ரகசிய கேமரா… விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்..!
ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள குடிவாடா பகுதியில், பொறியியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் விடுதியில் உள்ள பெண்கள் கழிவறையில், ரகசிய கேமரா ஒன்று இருந்துள்ளதை மாணவிகள் கண்டறிந்துள்ளனர்.
இதனை கண்டுபிடித்த மாணவிகள், இது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் மற்றும் காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ரகசிய கேமராவை வைத்தது யார் என்பதை கண்டறிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாணவிகளின் புகாரை ஏற்றுக்கொண்ட காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இதுதொடர்பாக பிடெக் இறுதியாண்டு படிக்கும் ஆண்கள் விடுதியைச் சேர்ந்த மூத்த மாணவர் ஒருவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த செல்போன் மற்றும் லேப்டாப்களை பறிமுதல் செய்து திவீர விசாரணை மேற்க்கொண்டனர்.
விசாரணையில் ரகசிய கேமரா மூலம் பதிவு செய்துள்ள பெண்கள் குளிக்கும் காட்சிகளை வெளிநாட்டில் உள்ள இணையதளங்களுக்கு விற்பனை செய்துள்ளது தெரியவந்தது. மேலும், இந்த சம்பவத்திற்கு உதவிய மற்றொரு மாணவர் மற்றும் இளம்பெண் ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்