வளசரவக்கம் காவல்துறையினர் அளித்த 2வது சம்மனை சீமான் வாங்க மறுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி விட்டதாக 2011 ஆம் ஆண்டு வளசரவாக்கம் போலீசில் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்காததால்
கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் கோயம்பேடு துணை கமிஷனர் உமையாள், நடிகை விஜயலட்சுமியிடம் விசாரணை செய்தார் . பின்னர் திருவள்ளுரில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு நடிகை விஜயலட்சுமி ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு நடிகை விஜயலட்சுமிக்கு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக வளசரவாக்கம் போலீசார் விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என்று சீமானுக்கு சம்மன் அனுப்பினர். இதனை தொடர்ந்து 12-ம் தேதி ஆஜராவார் என்று சீமான் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் அன்று சீமான் ஆஜாராகாமல் தனது வழக்கறிஞர்களை அனுப்பி வைத்துள்ளார்.
இந்நிலையில் மீண்டும் வளசரவாக்கம் போலீசார் 2-வது சம்மனை நேரில் கொடுத்தனர். ஆனால் சீமான் தரப்பு சம்மனை வாங்க மறுத்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இதையும் படிக்க:
உயிரோடு இருக்கும் எல்.டி.டி.இ தலைவர் பிராபகரின் மகள்… வெளியான அதிர்ச்சி வீடியோ…!