‘ரஜினியின் அரசியல் முடிவு’ சீமான் வரவேற்பு!

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது அரசியல் திட்டங்கள் குறித்து பேசினார் அதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இன்று சென்னை லீலா பேலஸில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய அரசியல் நிலைப்பாடு குறித்து அனைவருக்கும் விளக்கினார்.

அதில்,”தான் முதலமைச்சர் பதவியை நான் ஒருபோதும் நினைத்து பார்த்தது கிடையாது என்றும் ரஜினி முதலமைச்சர் இல்லை என பட்டி தொட்டியெங்கும் எழுச்சி ஏற்படுத்துங்கள். மக்களிடம் எழுச்சி ஏற்பட்ட பின் நான் அரசியலுக்கு வருகிறேன்” என்று கூறினார் .

மேலும் “அரசியலுக்காக தான் மூன்று திட்டங்களை வைத்துள்ளதாகவும் அதில் முதல் திட்டம் கட்சியில் தேவையான பதவிகள் மட்டுமே இருக்கும் என்றும் 2வது திட்டமாக இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகள் கொடுக்கப்படும் என்றும் மூன்றாவது மற்றும் முக்கிய திட்டமாக கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை” என்றும் கூறினார்.

இந்நிலையில் ரஜினியின் இந்த அரசியல் முடிவை தான் வரவேற்பதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், “ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் முடிவை வரவேற்கிறோம்; வாழ்த்துகிறோம். இதே போன்று தான், அரசியல், அமைப்பு, அடிப்படை மாற்றத்திற்காக கடந்த 10 வருடங்களாக உண்மையோடும் உறுதியோடும் உள்ளத்தூய்மையோடும் போராடி வருகிறோம். அதில் நாங்கள் உறுதியாக வெல்வோம்” என தெரிவித்துள்ளார்.

ரஜினி தான் அரசியலுக்கு வருவதாக அறிவித்தது முதலே சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரலாம் ஆனால் முதல்வராக கூடாது என்று கூறி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

What do you think?

ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவுக்கு வர தடை – டிரம்ப் அதிரடி!

‘விஜய்யால் தான் நான் நடிகரானேன்’ இயக்குனர் கௌதம் மேனன் புதிய தகவல்!