Exclusive Today Trending சினிமா

சிங்காரச் செல்வன் சீமானின் ‘ஏய் பொண்டாட்டி’ – தம்பிகள் அதிர்ச்சி!

ஏய் பொண்டாட்டி என நடிகர் சீமான் சட்டையின்றி சினிமா வசனங்களை பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரவாகி வருகிறது .

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களோடு கரம் கோர்த்து நடித்தவர் பிரபல நடிகை விஜயலட்சுமி . இவர் நடிகரும், நாம் தமிழர் கட்சியின் தலைவருமான சீமான், தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி பழகிவிட்டு ஏமாற்றியதாக சமீபத்தில் பரபரப்பு புகாரை கூறியிருந்தார்..இதை ஏற்காத சீமான், “நடிகை விஜயலட்சுமி சினிமா வாய்ப்புகள் கிடைக்காததால் வறுமையில் தவித்து வருவதாக தன்னிடம் கூறினார் என்றும்..ஆனால், அவருக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை” என்றும் கூறியிருந்தார்.

இதையடுத்து விஜயலட்சுமி சீமானுடன் எடுத்திருந்த பழைய புகைப்படங்களை வெளியிட்டு, நாங்கள் காதலித்ததற்கு இதுதான் ஆதாரம் என்றும் கூறினார். மேலும், அந்த புகைப்படங்கள் நாங்கள் இருவரும் காதலர் தினத்தை கொண்டாடிய போது எடுக்கப்பட்டவை எனவும் தெரிவித்திருந்தார். இப்படி பல வழிகளில் சீமானை சாடி வரும் நடிகை விஜயலட்சுமி, சீமானுடன் இருந்த வீடியோவையும் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் சட்டையின்றி காணப்படும் சீமான், “ஏய் பொண்டாட்டி நா கெட்டவன் இல்லடி, கேடுகெட்டவன்” என பஞ்ச் வசனம் பேசுகிறார்.

இந்த காணொலி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தன்னை இரண்டு வருடங்களாக நம்பவைத்து தன் வாழ்க்கையை கெடுத்துவிட்டதாக நடிகை விஜயலட்சுமி பேசும் காணொளி ஒன்று வெளியாகி தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

மேடைகள் கிடைத்து விட்டால் பொய்யையும் உண்மையை போன்று பேசும் தமிழகத்தின் கோயபல்ஸ் சீமான் என்ற விமர்சனங்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், நடிகை விஜயலட்சுமியின் இந்த புகார் அவர் மீதான விமர்சனங்களையும் குற்றச்சாட்டுக்களையும் உண்மையென நிரூபிப்பதாக அவரது தொண்டர்கள் முகம் சுளிக்கின்றனர். மேலும், அவரது கட்சியைச் சேர்ந்த பலர் சீமானை கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர்.

Related posts

அசுர பலத்துடன் டெல்லியில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது ஆம்ஆத்மி

Digital Team

இந்தியா-இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு! : இலங்கை அமைச்சர் வலியுறுத்தல்

Digital Team

தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் CAA எதிர்ப்பு போராட்டம்

Digital Team

ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களுக்கு எம்.பி., நவாஸ்கனி ஆறுதல்

Digital Team

வேலைவாய்ப்புகள் குறித்த வைகோவின் கேள்விக்கு மத்திய அரசு பதில்

Digital Team

கோவிட்-19 : பலி எண்ணிக்கை 1,765 ஆக அதிகரிப்பு

Digital Team
You cannot copy content of this page
Madhimugam