‘தோனி கதை முடிந்தது’ சேவாக் அதிரடி கருத்து, கோபத்தில் ரசிகர்கள்!

இந்திய அணியில் மீண்டும் தோனி இடம் பிடிக்கமாட்டார் என்று முன்னாள் நட்சத்திர வீரர் சேவாக் தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை தொடருக்கு பின்பு இந்திய அணியின் நட்சத்திர வீரர் தோனிக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவதை பொறுத்தே அவர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவது குறித்து யோசிக்க முடியும் என்று பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். தோனியும் ஐபிஎல் போட்டிக்காக ஒரு மாதத்திற்கு முன்பே சென்னைக்கு வந்து ஐபிஎல் போட்டிகளிலும் பங்கேற்றார். தற்போது ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் சற்று ஏமாற்றமடைந்துள்ளனர்.

இந்நிலையில் தோனி மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப மாட்டார் என்று நட்சத்திர வீரர் சேவாக் கூறியுள்ளார். அகமதாபாத்தில், புதிய விளையாட்டு உபகரணங்கள் கடை ஒன்றை திறந்து வைத்த சேவாக் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது தோனி குறித்து அவர் கூறுகையில், ” என்னை பொறுத்தவரை மூத்த வீரரான தோனி ஐ.பி.எல். மூலம் இந்திய அணிக்கு மீண்டும் திரும்ப வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது என்றும் தேர்வாளர்கள் அவரை ஒதுக்கி விட்டு, மாற்று வீரரை கண்டறியும் பணியில் ஏற்கனவே தொடங்கி விட்டனர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எனவே அவர் இந்திய அணியில் மறுபிரவேசம் செய்வது என்பது மிகவும் கடினம்” என்றும் குறிப்பிட்டார்.

மேலும் அவர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடினாலும் கூட, தற்போதைய இந்திய அணியில் யாருக்கு பதிலாக அவரை சேர்க்க முடியும்? தற்போது இந்திய அணியில் லோகேஷ் ராகுல், விக்கெட் கீப்பிங் பணியை சிறப்பாக செய்கிறார். எனவே அவருக்கு பதிலாக தோனியை களமிறக்குவது என்பது சாத்தியமில்லாத ஒன்று. இதே போல் இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பந்துக்கு மாற்றாக தோனியை இறங்குவார்கள் என்று நினைத்து கூட பார்க்க முடியாது” என்றும் குறிப்பிட்டார்.சேவாக்கின் இந்த கருத்து தோனி ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

What do you think?

கொரோனா அறிகுறி; தமிழகத்தில் 2,635 பேர் தீவிர கண்காணிப்பு!

காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் அதிரடி கைது!