சுயமரியாதை திருமணம் செய்த காதல் ஜோடி..! ஜாதியால் ஏற்பட்ட பிரச்சனை..!
ஈரோட்டில் சாதிமறுப்பு சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி, கழுத்தில் மாலையுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்..
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள கொத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்த லாரி ஓட்டுனர் ராம்குமாரும், அய்யம்பாளையத்தை சேர்ந்த பட்டதாரி இளம்பெண் மாளவிகா.வும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் மாற்று சமூகத்தினர் என்பதால் மாளவிகா வீட்டில் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் மாளவிகாவை வீட்டில் தனிமைப்படுத்தி வைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய இருவரும் ஈரோட்டில் தந்தை பெரியார் திராவிடர் கழக நிர்வாகிகள் முன்னிலையில் மாலை மாற்றி சுயமரியாதை திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் பாதுகாப்பு கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர்.
– லோகேஸ்வரி.வெ