“அண்ணாமலைக்கிட்ட நிக்குறதுக்கு நாண்டுக்கிட்டு சாகலாம்..” சரமாரியாக விளாசிய செல்லூர் ராஜு..!!
மதுரை மாவட்டம் பரவையில் அதிமுக நிகழ்ச்சி ஒன்று பங்கேற்று பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் மதுரை மாவட்ட செயலாளருமான “செல்லூர் ராஜூ” பாஜக தலைவர் அண்ணாமலை பற்றி சரமாரியாக விமர்சித்து பேசியுள்ளார்..
அதிமுக கட்சியை தொடங்கியது நானாக இருந்தாலும். அதை பட்டி தொட்டி எங்கும் பரவ செய்தது எனது அருமை தம்பி “எம்.ஜி.இராமச்சந்திரன்” என அறிஞ்சர் அண்ணா கூறியுள்ளார். ஆனால் பாஜகவில் தலைவராக இருக்கும் அண்ணாமலை., அரசியல் நேற்று முளைத்த காளான் போல. எனக்கு அண்ணாமலையை எப்போதுமே பிடிக்காது. பாஜக ஒரு “அகில இந்திய கட்சி” அதில் மாநிலக் கட்சியின் தலைவராக இருக்கும் ஒருவர் எப்படி இருக்க வேண்டும்..
அதிமுக என்னவோ அவருகிட்ட கூட்டணிக்கு பேசினா மாதிரி அவன் சொல்லுறாரு, இனிமேல் அதிமுக தலைமையை நாங்க ஏற்க விரும்பல., எங்க கிட்ட கேட்டு தான் அதிமுக எங்கையும் போகனும் வரணும்னு சொல்லுறாரு.. அப்படி அவரு மாதிரி எல்லாத்துக்கும் ஆமா சாமி போட்டு பொழைக்குறதுக்கு நாங்க நாண்டுக்கிட்டு செத்துப் போவோம்.
அண்ணாமலை எல்லாம் பேசுவதற்கு என்ன தகுதி இருக்கு..? எம்ஜிஆர் காலத்தில் இருந்து மக்களுக்காக செயல்பட்டு வரும் அதிமுக வந்து., நேத்து முளைச்ச உன் கிட்ட சீட்டு கேட்டு நிக்கணுமா..? இப்படியெல்லாம் வாய்க்கொழுப்போடு பேசக்கூடாது.
அண்ணாமலை இருக்கும் வரைக்கும் பாஜக நாசமாக தான் போகும். 32 ஆண்டு காலமாக ஆட்சியில் இருக்கும் கட்சி, புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களால் உருவாக்கப்பட்ட அதிமுக. இன்றைக்கு கீழே இருக்கிறவர்கள் மேலே வர முடியும்.. உன்னை மாதிரி உட்கார வைத்து பதவிக்கு வந்தவர்கள் அல்ல எடப்பாடியார்.!
தொண்டனால் உட்கார வைத்து அழகு பார்க்கப் பட்டவர்., இப்படி பட்ட கட்சி அண்ணாமலைக்கிட்ட வந்து சீட்டு கேட்குமா..? இருந்தாலும் அண்ணாமலைக்கு இவ்வளவு வாய்க்கொழுப்பு இருக்க கூடாது. என சரமாரியாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் வெளுத்து வாங்கினார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..