“விவசாயிகளுக்கு கடன் இல்லை என்ற நிலை வராது” – செல்லூர் ராஜூ உறுதி

கூட்டுறவு வங்கிகளில் உண்மையான விவசாயிகளுக்கு கடன் இல்லை என்ற நிலை வராது என சட்டபேரவையில் அமைச்சர் செல்லூர் ராஜூ உறுதியளித்துள்ளார்.

விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகளில் முறையாக கடன் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, விவசாயிகளுக்கு 4,432 கோடி ரூபாய் கடன் கொடுத்து தமிழக அரசு சாதனை புரிந்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், பணமதிப்பிழப்பு போன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கூட்டுறவு வங்கிகள் தனது பணியை சிறப்பாக செயலாற்றியதாகவும், கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு 11 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கப்படும் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ குறிப்பிட்டார்.

What do you think?

இந்தியாவில் கொரோனா வைரஸ்? – கறிக்கோழி விற்பனை சரிவு

சிலிண்டருக்கு மாலை அணிவித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்