காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் அதிரடி கைது!

மத்திய பிரதேச எம்எல்ஏக்கள் 21 பேர் தங்கியுள்ள பெங்களூரு விடுதி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கைது செய்யப்பட்டார்.

மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா கடந்த வாரம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அவருடன் 21 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்தனர். அவர்கள் அனைவரும் பெங்களுரூவில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், 21 எம்எல்ஏக்கள் தங்கியுள்ள விடுதிக்கு மத்திய பிரதேச காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் செல்ல முயன்ற போது போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் விடுதி முன்பு திக் விஜய் சிங் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

What do you think?

‘தோனி கதை முடிந்தது’ சேவாக் அதிரடி கருத்து, கோபத்தில் ரசிகர்கள்!

திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் இத்தனை ஆயிரம் கோடி இழப்பா?