காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் காலமானார்…!! துணை முதலமைச்சர் உதயநிதி இரங்கல்…!!
காங்கிரஸ் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவிற்கு அரசியல் கட்சித்தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவர் – ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக மக்கள் பணியாற்றிய அண்ணன் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல் நலக்குறைவால் மறைந்த செய்தி அறிந்து வருந்துகிறேன்.
தந்தை பெரியாரின் பேரன். முத்தமிழறிஞர் கலைஞர் – கழகத்தலைவர் மீது மாறா பற்றுக் கொண்டவர்.எதையுமே வெளிப்படையாகப் பேசும் ஆற்றலுக்கு சொந்தக்காரர். நம்முடைய அரசியல் பயணத்தில் வழிகாட்டி ஊக்குவித்த பண்பாளர். ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது அவருடன் நெருங்கிப்பழகும் வாய்ப்பை பெற்றோம்.
அதேபோல, ஈரோட்டில் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், சிறப்புத்திட்டச் செயலாக்கத்துறையின் முன்னெடுப்பில் தந்தை பெரியாரின் பூர்வீக இடத்துக்கான பட்டாவை அண்ணனிடம் வழங்கிய போது, அதற்காக தமிழ்நாடு அரசையும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களையும், நம்மையும், அவர் வாழ்த்திப் பேசியது இன்றும் நம் மனதில் நிழலாடுகிறது.
அண்ணன் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அவர்களின் மறைவு காங்கிரஸ் பேரியக்கத்துக்கு மட்டுமன்றி, தமிழ்நாடு அரசியல் களத்திலும் பேரிழப்பாகும். அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். அவரை இழந்து வாடும் குடும்பத்தார் நண்பர்கள் காங்கிரஸ் தொண்டர்கள் அனைவருக்கும் என் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன் என இவ்வாறே அவர் பதிவிட்டுள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..